இந்த வார பாக்ஸ் ஆபிஸ் போட்டி... இன்று களமிறங்கும் புதிய படங்கள்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
07 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 07 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இந்த வார பாக்ஸ் ஆபிஸ் போட்டி... இன்று களமிறங்கும் புதிய படங்கள்

இந்த வார பாக்ஸ் ஆபிஸ் போட்டி... இன்று களமிறங்கும் புதிய படங்கள்

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று வெளியாகும் புதிய திரைப்படங்கள் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைகின்றன. அந்த வரிசையில், ஆகஸ்ட் 7-ஆம் தேதியான இன்று பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் பல தமிழ் திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளன. இந்த வார பாக்ஸ் ஆபிஸ் போட்டியில் இணைந்துள்ள முக்கிய படங்கள் குறித்து பார்க்கலாம்.முதலாவதாக, இயக்குநர் கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் மாதவன் நடித்துள்ள 'ஜி.டி.என்' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. "இந்தியாவின் எடிசன்" எனப் போற்றப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், தம்பி ராமையா, அதிதி பாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.அடுத்து, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள 'டிசி' திரைப்படமும் இன்று ரசிகர்களை சந்திக்கிறது. இதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், 'தேவதாஸ்' என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் வாமிகா கபி 'சந்திரா' என்ற கதாபாத்திரத்தில் இணைந்து நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.'ரா' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான அஷ்ரப், தற்போது 'போட்டோகிராபர்' படத்தில் நாயகனாக நடித்ததுடன், இயக்குநராகவும் பொறுப்பேற்றுள்ளார். ஜனனி கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படம், சைக்காலஜிக்கல் சர்வைவல் மிஸ்டரி திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. கருணாகரன், ஆடுகளம் நரேன், உறியடி சிவா, தேவி மகேஷ், ஜே.பி. ஜெய், வேலா ராமமூர்த்தி, நிழல்கள் ரவி மற்றும் வெற்றிவேல் ராஜா உள்ளிட்டோர் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இதேபோல், குடும்ப பின்னணியுடனும் நகைச்சுவை அம்சங்களுடனும் உருவாக்கப்பட்டுள்ள'வைப் பேங்க் ஆப் இந்தியா' திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை செல்வா எழுதி இயக்கியுள்ள நிலையில், கீ. சீனிவாசன் தயாரித்துள்ளார்.