இது என் அம்மாவின் கனவு" - காமன்வெல்த் தங்கத்தை தாய்க்கு அர்ப்பணித்த ஷர்மிளா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
28 Jul 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Jul 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இது என் அம்மாவின் கனவு" - காமன்வெல்த் தங்கத்தை தாய்க்கு அர்ப்பணித்த ஷர்மிளா

இது என் அம்மாவின் கனவு" - காமன்வெல்த் தங்கத்தை தாய்க்கு அர்ப்பணித்த ஷர்மிளா

2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான குண்டு எறிதல் பிரிவில் இந்தியாவின் ஷர்மிளா தன்கர் தங்கப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். 40 வயதான ஷர்மிளா தன்கர், 9.81 மீட்டர் தூரம் குண்டை எறிந்து முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கானாவைச் சேர்ந்த சினாபு இசா 8.65 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை பெற்றார்.வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஷர்மிளா, இந்த சாதனை தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிப்பதாக தெரிவித்தார். நாட்டிற்காக பதக்கம் வென்றிருப்பது பெருமையான தருணம் என்றும், இனியும் தொடர்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்படுவேன் என்றும் கூறினார்.மேலும், இந்த வெற்றி தனது சொந்த கனவு மட்டுமல்ல, தனது தாயின் நீண்டநாள் கனவும் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இந்த சாதனையைப் பார்த்து தனது தாயார் மிகவும் மகிழ்ச்சி அடைவார் என்றும், காமன்வெல்த் தங்கப் பதக்கத்தை அவருக்கே அர்ப்பணிப்பதாகவும் ஷர்மிளா உணர்ச்சிப்பூர்வமாக தெரிவித்தார்.