'இதயம் முரளி' முதல் 'வதந்தி 2' வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் தொடர்கள்!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
06 Aug 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 06 Aug 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

'இதயம் முரளி' முதல் 'வதந்தி 2' வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் தொடர்கள்!

'இதயம் முரளி' முதல் 'வதந்தி 2' வரை... இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள், வெப் தொடர்கள்!

இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு விருந்தாக தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல திரைப்படங்களும் வெப் தொடர்களும் வெளியாக உள்ளன. அதர்வா நடித்த 'இதயம் முரளி', விஜய் ஆண்டனியின் 'நூறு சாமி', சசிகுமார் நடித்த 'வதந்தி 2' உள்ளிட்ட பல முக்கிய படைப்புகள் இந்த வார ஓடிடி வெளியீட்டு பட்டியலில் இடம்பிடித்துள்ளன. உயிர் மலையாள க்ரைம் த்ரில்லர் திரைப்படமான 'உயிர்' ஜூன் 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. எம். பத்மகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் ரோஷன் மேத்யூ, பைஜு சந்தோஷ், அதுல்யா சந்திரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 4 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளிலும் ஸ்ட்ரீமிங் ஆகிறது. மைன் வாப்பஸ் ஆவுங்கா இம்தியாஸ் அலி இயக்கியுள்ள இந்தி பிரியட் டிராமா 'மைன் வாப்பஸ் ஆவுங்கா'வில் தில்ஜித் தோசாஞ், நசிருதீன் ஷா, வேதாங் ரைனா, சர்வாரி வாக் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 7 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. லெனின் தெலுங்கு ஆக்‌ஷன் டிராமா 'லெனின்' படத்தில் அகில் அக்கினேனி, சுனில் வர்மா, பிரம்மாஜி நடித்துள்ளனர். முரளி கிஷோர் அப்புரு இயக்கியுள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். படம் ஆகஸ்ட் 7 முதல் ஜீ5 தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. இதயம் முரளி அதர்வா முரளி, ஃபஹத் ஃபாசில், நடராஜன் நட்டி, ப்ரீத்தி முகுந்தன், கயாது லோஹர் நடித்துள்ள 'இதயம் முரளி' திரைப்படம் ஜூலை 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆகாஷ் பாஸ்கரன் இயக்கியுள்ள இப்படம் ஆகஸ்ட் 7 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. கட்டாளன் பால் ஜார்ஜ் இயக்கியுள்ள மலையாள ஆக்‌ஷன் த்ரில்லர் 'கட்டாளன்' படத்தில் அந்தோணி வர்கீஸ், கபிர் துகான் சிங், ஜெகதீஸ், சித்திக், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 7 முதல் மனோரமா மேக்ஸ் தளத்தில் வெளியாகிறது. ஆபரேஷன் சஃபேத் சாகர்: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆஃப் தி கார்கில் வார் கார்கில் போரை மையமாகக் கொண்ட இந்த 8 எபிசோடுகள் கொண்ட வெப் தொடரை ஓனிசென் இயக்கியுள்ளார். சித்தார்த், ஜிம்மி ஷெர்கில், அபய் வர்மா, தியா மிர்சா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த தொடர் ஆகஸ்ட் 7 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. நூறு சாமி சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா நடித்துள்ள 'நூறு சாமி' திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றது. இப்படம் ஆகஸ்ட் 7 முதல் ஜீ5 தளத்தில் வெளியாகிறது. வதந்தி 2 முதல் சீசனின் வெற்றியைத் தொடர்ந்து உருவாகியுள்ள 'வதந்தி 2' வெப் தொடரில் சசிகுமார் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள இந்த 8 எபிசோடுகள் கொண்ட தொடர் ஆகஸ்ட் 7 முதல் அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.