இடைத்தேர்தல்: தவெக கூட்டணிக்கு தமாகா ஆதரவு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இடைத்தேர்தல்: தவெக கூட்டணிக்கு தமாகா ஆதரவு

இடைத்தேர்தல்: தவெக கூட்டணிக்கு தமாகா ஆதரவு

தமிழகத்தில் முதல்வர் விஜய் போட்டியிட்ட திருச்சி கிழக்கு தொகுதி உள்ளிட்ட 7 சட்டப்பேரவை தொகுதிகள் காலியாக உள்ளன. இதில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தொகுதிகளிலும் தவெக கூட்டணி, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் இடதுசாரிகள் என 5 முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். காமராஜர் மற்றும் மூப்பனாரின் எண்ணங்களுக்கு ஏற்ப வளமான தமிழகத்தை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், 60 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து துறைகளிலும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அரசாக தவெக ஆட்சி அமைந்துள்ளதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக கூட்டணிக்கு தமாகா ஆதரவு வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.