இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள்: முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
12 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 12 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள்: முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள்: முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்!

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர், தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மதுராந்தகம் தொகுதியில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் 74,048 வாக்குகளையும், தாராபுரம் தொகுதியில் களமிறங்கிய சத்தியபாமா 66,841 வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றனர். இதையடுத்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் முன்னிலையில் இருவரும் சட்டமன்ற உறுப்பினர்களாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வின்போது அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். உறுதிமொழி ஏற்பைத் தொடர்ந்து, மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோர் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தனர். அப்போது அவருக்குப் பூங்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றனர்.