இடுக்கு பிள்ளையார் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள்: உடல் பருமன், உடல்நலப் பிரச்னை உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

27 Jul 2026 www.thinathulir.com

இடுக்கு பிள்ளையார் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள்: உடல் பருமன், உடல்நலப் பிரச்னை உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை

இடுக்கு பிள்ளையார் கோவிலில் புதிய கட்டுப்பாடுகள்: உடல் பருமன், உடல்நலப் பிரச்னை உள்ளவர்களுக்கு அனுமதி இல்லை

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள பிரபலமான இடுக்கு பிள்ளையார் கோவிலின் குறுகிய குகைப்பாதையில், உடல் பருமன் காரணமாக ஆந்திராவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிக்கி உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்கும் முன்பே, அதே இடத்தில் மற்றொரு பக்தரும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கோவில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இந்த கோவிலில், சிறிய குகை வடிவிலான அமைப்புடன் மூன்று வாசல்கள் உள்ளன. பக்தர்கள் பின்புற வாசல் வழியாக படுத்த நிலையில் உள்ளே சென்று, கைகளை ஊன்றியபடி மெதுவாக நகர்ந்து முன்புற வாசல் வழியாக வெளியே வர வேண்டும். குகைப்பாதையை கடந்தவுடன் நந்தி பகவான் சன்னதி அமைந்துள்ளது. பின்னர் பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் தரிசித்து வழிபடுகின்றனர்.கடந்த 24-ஆம் தேதி நள்ளிரவில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 36 வயதான மணிக்குமார் தனது குடும்பத்தினருடன் கிரிவலம் வந்திருந்தார். அப்போது இடுக்கு பிள்ளையார் கோவிலின் குறுகிய குகைப்பாதையில் நுழைந்த அவர், வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டார். மூச்சுத்திணறலால் மயங்கிய அவரை, அருகிலிருந்த பக்தர்கள் போராடி வெளியே மீட்டனர். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, நேற்று ஆந்திராவைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் கிரிவலத்தின் போது அதே கோவிலில் உள்ள குறுகிய குகைப்பாதை வழியாக தரிசனம் செய்ய முயன்றார். ஆனால், உடல் பருமன் காரணமாக அவர் அந்த இடுக்கில் சிக்கிக் கொண்டார். அங்கிருந்தவர்கள் அவரை கையைப் பிடித்து பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.தொடர்ச்சியாக பக்தர்கள் இந்த குறுகிய குகைப்பாதையில் சிக்கிக் கொள்வதை கருத்தில் கொண்டு, கோவில் நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதற்காக கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையில், "உடல் பருமன் உள்ளவர்களுக்கும், உடல்நலக் குறைவு உள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.