ஆல்-டைம் டாப் 10 பந்துவீச்சாளர்கள் பட்டியல்: ஜாம்பவான்களை முந்திய பும்ரா... 3-வது இடம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
14 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 14 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆல்-டைம் டாப் 10 பந்துவீச்சாளர்கள் பட்டியல்: ஜாம்பவான்களை முந்திய பும்ரா... 3-வது இடம்

ஆல்-டைம் டாப் 10 பந்துவீச்சாளர்கள் பட்டியல்: ஜாம்பவான்களை முந்திய பும்ரா... 3-வது இடம்

21-ஆம் நூற்றாண்டின் சிறந்த 10 பந்துவீச்சாளர்கள் குறித்த பட்டியலை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஸ் பட்லரும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இவர்களின் ‘For the Love of Cricket’ என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் இந்தத் தேர்வு இடம்பெற்றது. இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மறைந்த சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் ஷேன் வார்னே முதலிடத்தைப் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத் நான்காவது இடத்திலும், அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஐந்தாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவர்களில் ஒருவரான இலங்கையின் முத்தையா முரளிதரன் ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் ஏழாவது இடத்திலும், அதே நாட்டைச் சேர்ந்த ககிசோ ரபாடா எட்டாவது இடத்திலும் உள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் பத்தாவது இடத்துடன் பட்டியலை நிறைவு செய்துள்ளார்.