பின்லாந்தில் நடைபெற்று வரும் ஆர்க்டிக் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து, பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். முதல் சுற்றில் கனடாவின் வென் யு ஜாங்கை எதிர்கொண்ட சிந்து, தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் 21-8, 21-11 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். 2வது சுற்றில் ஜப்பான் வீராங்கனை ரிகோவை பி.வி.சிந்து எதிர்கொள்ள உள்ளார்.