ஆர்.எஸ். பாரதி விமர்சனம்: "திரிஷா என்ன பிரதமரா? முதல்வரா?
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
04 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 04 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆர்.எஸ். பாரதி விமர்சனம்: "திரிஷா என்ன பிரதமரா? முதல்வரா?

ஆர்.எஸ். பாரதி விமர்சனம்: "திரிஷா என்ன பிரதமரா? முதல்வரா?

தஞ்சையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தின் போது ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். அதையடுத்து, போலீசார் அவரை தஞ்சைக்கு அழைத்துச் சென்று வருகின்றனர்.இந்தச் சூழலில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துகளை வெளியிட்டார்.அவர் பேசுகையில், "விஜய் 'ஜனநாயகன்' திரைப்படத்தில் நடித்திருக்கலாம். ஆனால், ஜனநாயகம் குறித்து அவருக்கு அடிப்படை புரிதல்கூட இல்லை. குடிநீர் வராததால் ஏற்பட்ட அதிருப்தியில் ஒருவர் நடிகை திரிஷாவின் பெயரை குறிப்பிட்டார். அதில் என்ன பெரிய தவறு இருக்கிறது? தண்ணீர் என்பது மக்களின் அடிப்படை தேவையே. அந்த விவகாரத்தை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம்," என்றார்.மேலும், "திரிஷா குறித்து பேசப்பட்டதற்காக இவ்வளவு அவசர நடவடிக்கை எதற்கு? அவர் பிரதமரா அல்லது முதல்வரா? அவரை விமர்சித்தால் கைது செய்ய வேண்டுமா? மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, எதிர்க்கட்சியினரை கைது செய்வதில்தான் தவெக அரசு தீவிரம் காட்டுகிறது," என்று குற்றம்சாட்டினார்.தொடர்ந்து பேசிய அவர், "ஒருகாலத்தில் கருணாநிதியும் இதேபோன்று கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். இன்று அதே நிலை உதயநிதி ஸ்டாலினுக்கும் ஏற்பட்டுள்ளது. இனிமேல் உதயநிதியை 'இளைய கலைஞர்' என்று அழைக்க வேண்டிய சூழலை விஜய்தான் உருவாக்கியுள்ளார்," என்றும் தெரிவித்தார்.