ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து: எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வாழ்த்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
19 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 19 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து: எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வாழ்த்து

ஆயுத பூஜை, விஜயதசமி வாழ்த்து: எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு வாழ்த்து

ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நவராத்திரியின் நிறைவாக வரும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி பண்டிகைகளை பக்தியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளித்து, தங்களது பணிகளுக்குப் பயன்படுத்தும் கருவிகளை வழிபடுவதன் மூலம் தொழிலின் சிறப்பை போற்றும் நாளாக ஆயுத பூஜை திகழ்கிறது. அதேபோல், விஜயதசமி நாளில் தொடங்கும் செயல்கள் வெற்றிகரமாக நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன், அன்னை மகா சக்தியை வழிபட்டு மக்கள் புதிய முயற்சிகளையும் நல்ல காரியங்களையும் தொடங்குகின்றனர். இதனால் இப்பண்டிகை வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. 'தொழிலே தெய்வம்', 'உழைப்பே வெற்றிக்கு வழி' என்ற உயரிய கருத்துகளை எடுத்துரைக்கும் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாட்களைக் கொண்டாடும் மக்கள் அனைவரும் வாழ்வில் செல்வம், நலன், வளம் ஆகியவற்றைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.