ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
23 Sep 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 23 Sep 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ நிலை அறிக்கை தாக்கல்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக முன்னாள் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், வழக்கின் விசாரணை தொடர்பான நிலை அறிக்கையை சிபிஐ தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளது. அதில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் பலர் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வெளியில் இருந்தால் சாட்சிகளை மிரட்டுவது, ஆதாரங்களை அழிப்பது மற்றும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தலைமறைவாகும் வாய்ப்புகள் இருப்பதாகவும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. மாநில காவல்துறை மேற்கொண்ட விசாரணையில், குற்றச்சதியில் ஈடுபட்டது, நாட்டு வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கி கொண்டு சென்றது, நிதி உதவி செய்தது மற்றும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் நேரடியாக பங்கேற்றது ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், எந்தவித வெளிப்புற அழுத்தமும் இன்றி சுதந்திரமாகவும் நியாயமாகவும் விசாரணையை விரைவாக நிறைவு செய்ய, சம்பந்தப்பட்டவர்களின் ஜாமின் உத்தரவுகளை ரத்து செய்து மீண்டும் அவர்களை காவலில் எடுக்க வேண்டும் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணையை முடிக்க சென்னை ஐகோர்ட்டு ஆறு மாத கால அவகாசம் வழங்கியுள்ளது. இதனிடையே, வழக்கின் விசாரணைக்காக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, தடய அறிவியல் அறிக்கைகள், அழைப்பு பதிவுகள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் உள்ளிட்டவை தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.