ஆம்னி பஸ்சில் 40 பவுன் நகைகள் கொள்ளை: மத்தியபிரதேசத்தில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது!
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

14 Sep 2026 www.thinathulir.com

ஆம்னி பஸ்சில் 40 பவுன் நகைகள் கொள்ளை: மத்தியபிரதேசத்தில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது!

ஆம்னி பஸ்சில் 40 பவுன் நகைகள் கொள்ளை: மத்தியபிரதேசத்தில் பதுங்கியிருந்த முக்கிய குற்றவாளி கைது!

நெல்லை மாவட்டம் பொதிகை நகரைச் சேர்ந்தவர் ஜஸ்டின் (56). இவரது மனைவி ஜூலியட், தனியார் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். இருவரும் சென்னையில் வசிக்கும் தங்களது மகன் வீட்டுக்குச் செல்வதற்காக கடந்த மாதம் 27-ம் தேதி இரவு நெல்லையில் இருந்து ஆம்னி பஸ்சில் பயணம் மேற்கொண்டனர். அப்போது சுமார் 40 பவுன் தங்க நகைகளை கைப்பையில் வைத்து எடுத்துச் சென்றனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சுங்கச்சாவடியை கடந்த பஸ், கரிசல்குளம் விலக்கு அருகே சென்றபோது, பயணிகள் உணவருந்துவதற்காக சாலையோர ஓட்டல் ஒன்றில் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். ஜஸ்டினும் ஜூலியட்டும் கைப்பையை பஸ்சுக்குள் வைத்துவிட்டு உணவு சாப்பிடச் சென்றனர். சிறிது நேரத்துக்குப் பிறகு மீண்டும் பஸ்சுக்கு வந்தபோது, கைப்பையில் வைத்திருந்த 40 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதுதொடர்பாக கயத்தாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பஸ்சில் பதிவாகியிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் சம்பவ நேரத்தில் பதிவான செல்போன் தொடர்புகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். இதில் நகை திருட்டில் ஈடுபட்டவர்கள் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின்பேரிலும், கோவில்பட்டி உதவி போலீஸ் சூப்பிரண்டு நீல் சர்மா ஆலோசனையின்படியும், கோவில்பட்டி மேற்கு இன்ஸ்பெக்டர் வானமாமலை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மத்தியபிரதேசத்துக்குச் சென்ற தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி, இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான மக்சூத் கான் (35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 40 பவுன் தங்க நகைகளும் முழுமையாக மீட்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் மக்சூத் கானுடன் தொடர்புடையதாக கூறப்படும் ரபிக் (40) மற்றும் கடுக்கான் என்ற முகதின் கான் ஆகிய இருவரும் போலீசாரிடம் சிக்காமல் தப்பியோடியதாக கூறப்படுகிறது. அவர்களை பிடிக்க போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட மக்சூத் கானை தனிப்படை போலீசார் நேற்று கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.