ஆப்கானிஸ்தானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 20 பேர் உயிரிழப்பு, 100-க்கும் மேற்பட்டோர் மாயம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

21 Jul 2026 www.thinathulir.com

ஆப்கானிஸ்தானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 20 பேர் உயிரிழப்பு, 100-க்கும் மேற்பட்டோர் மாயம்

ஆப்கானிஸ்தானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு: 20 பேர் உயிரிழப்பு, 100-க்கும் மேற்பட்டோர் மாயம்

ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக நுரிஸ்தான் மாகாணத்தில் பெய்துவரும் தீவிர மழையால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இந்த வெள்ளத்தால் மாகாணத்தின் பரன் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.அதே நேரத்தில், வெள்ளத்தில் சிக்கி 100-க்கும் அதிகமானோர் மாயமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.