ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
21 Aug 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 21 Aug 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வு

ஆபரண தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.880 உயர்வு

சென்னை: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 21) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,17,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.110 உயர்ந்து ரூ.14,710-ஆக உள்ளது.சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப தமிழகத்திலும் தங்கத்தின் விலையில் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் காணப்படுகின்றன.கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.14,400-க்கும், ஒரு சவரன் ரூ.1,15,200-க்கும் விற்பனையானது. அன்றைய தினம் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது.இதையடுத்து, ஆகஸ்ட் 20-ம் தேதி தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.14,600-ஆகவும், சவரனுக்கு ரூ.1,600 அதிகரித்து ரூ.1,16,800-ஆகவும் விற்பனையானது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.260-ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி ரூ.10,000 அதிகரித்து ரூ.2.60 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.880 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் ரூ.1,17,680-க்கும், ஒரு கிராம் ரூ.14,710-க்கும் விற்பனைசெய்யப்படுகிறது.வெள்ளியின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 அதிகரித்து ரூ.2 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.