ஆனந்த் தேவரகொண்டா நடித்த 'எபிக்' படத்தின் டிரெய்லர் வெளியீடு
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

05 Sep 2026 www.thinathulir.com

ஆனந்த் தேவரகொண்டா நடித்த 'எபிக்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

ஆனந்த் தேவரகொண்டா நடித்த 'எபிக்' படத்தின் டிரெய்லர் வெளியீடு

ஆனந்த் தேவரகொண்டா மற்றும் வைஷ்ணவி சைதன்யா மீண்டும் இணைந்து நடித்துள்ள ‘எபிக்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.கடந்த 2023-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘பேபி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜய் தேவரகொண்டாவின் சகோதரரான ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தில் வைஷ்ணவி சைதன்யா கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்கேஎன் தயாரித்த இப்படத்தை சாய் ராஜேஷ் இயக்கியிருந்தார். பிலிம்பேர் சவுத் 2024 விருது விழாவில் 8 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ‘பேபி’ திரைப்படம், 5 விருதுகளை வென்றது.‘பேபி’ படத்துக்குப் பிறகு ஆனந்த் தேவரகொண்டா - வைஷ்ணவி சைதன்யா கூட்டணி ‘எபிக்’ திரைப்படத்திற்காக மீண்டும் இணைந்துள்ளது. ‘90ஸ்’ வெப் தொடரை இயக்கி கவனம் பெற்ற ஆதித்யா ஹாசன் இப்படத்தை இயக்கியுள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மென்ட் மற்றும் பார்ச்சூன் ஃபோர் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிவாஜி, வாசுகி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘எபிக்’ திரைப்படம் வரும் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வெளியான டிரெய்லர் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.