ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட சென்னை மீன்பிடி படகுகள் – தீர்வுக்காக தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
16 Jul 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 16 Jul 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட சென்னை மீன்பிடி படகுகள் – தீர்வுக்காக தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை

ஆந்திராவில் சிறைபிடிக்கப்பட்ட சென்னை மீன்பிடி படகுகள் – தீர்வுக்காக தமிழ்நாடு அரசு தீவிர நடவடிக்கை

சென்னை மற்றும் ஆந்திரப் பிரதேச மீனவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மீன்பிடி பிரச்சினைக்கு சுமூகமான தீர்வு காண தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆந்திர மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சென்னை சேர்ந்த 7 மீன்பிடி விசைப்படகுகளை விரைவில் விடுவிக்குமாறு தமிழ்நாடு அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்காக இரு மாநில அதிகாரிகள் மற்றும் மீனவர் சங்க பிரதிநிதிகளுடன் பல்வேறு கட்ட ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.மேலும், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச அதிகாரிகள் பங்கேற்ற இரு மாநிலக் கூட்டத்தில், சென்னை மீனவர்கள் வழக்கம்போல் ஆந்திர கடற்பகுதியில் சுமூகமாக மீன்பிடிக்க தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், இரு மாநிலங்களுக்கும் இடையிலான பிரச்சினை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மீனவர் நலத்துறை தெரிவித்துள்ளது.