ஆந்திராவில் NDA கூட்டணி அமோக வெற்றி: நயினார் நாகேந்திரன் வாழ்த்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
05 Nov 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 05 Nov 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆந்திராவில் NDA கூட்டணி அமோக வெற்றி: நயினார் நாகேந்திரன் வாழ்த்து

ஆந்திராவில் NDA கூட்டணி அமோக வெற்றி: நயினார் நாகேந்திரன் வாழ்த்து

ஆந்திரப் பிரதேசத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில் கூறியிருப்பதாவது: ஆந்திரப் பிரதேச நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தெலுங்கு தேசம் (TDP), ஜன சேனா (JSP), பாரதிய ஜனதா கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ள NDA கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மொத்தமுள்ள 13 மாநகராட்சி மேயர் பதவிகளில் 12 இடங்களையும், 87 நகராட்சி தலைவர் பதவிகளில் 81 இடங்களையும், 3,942 வார்டு உறுப்பினர் பதவிகளில் 3,223 இடங்களையும் கூட்டணி கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றிக்காக கூட்டணிக் கட்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமரின் வழிகாட்டுதலுடன் தொடர் உழைப்பையும், மக்கள் சேவையையும் முன்னெடுத்து இந்த வெற்றியைப் பெற்றுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் ஆந்திர மாநில பாஜக தலைவர் பி.வி.என். மாதவ் ஆகியோருக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் தோல்விகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே காரணம் என காங்கிரஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், வாக்குச்சீட்டு முறையில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் அக்கட்சி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. பொய்களையும் தவறான தகவல்களையும் பரப்புவதன் மூலம் மக்களின் ஆதரவைப் பெற முடியாது என்பதை காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் எனக் கூறப்படும் ராகுல் காந்தி எப்போது புரிந்துகொள்வார் எனத் தெரியவில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.