ஆந்திரா சென்றடைந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
13 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆந்திரா சென்றடைந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு

ஆந்திரா சென்றடைந்த முதல்வர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவைச் சந்திப்பதற்காக விஜய் இன்று விஜயவாடா சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதற்காக, சென்னை நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்குக் காரில் புறப்பட்ட விஜய், சென்னை விமான நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் ஆந்திரப் பிரதேசத்துக்குப் பயணம் மேற்கொண்டார். பிற்பகல் 3.45 மணிக்கு விஜயவாடா விமான நிலையத்தைச் சென்றடைந்த அவரை வரவேற்க ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட முதல்வர் விஜய், அங்கிருந்து 30.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கனக துர்கா கோவிலுக்குக் காரில் செல்கிறார். மாலை 4.55 மணிக்கு கோவிலை அடையும் அவர், மாலை 5 மணி முதல் 5.45 மணி வரை நடைபெறும் சிறப்பு பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபடுகிறார். இதையடுத்து, மாலை 5.45 மணிக்குக் கோவிலில் இருந்து புறப்படும் விஜய், மாலை 6 மணிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தைச் சென்றடைகிறார். அங்கு சுமார் ஒரு மணி நேரம் நடைபெறும் சந்திப்பின்போது, கோதாவரி–காவிரி நதிகள் இணைப்புத் திட்டம் மற்றும் கிருஷ்ணா நதிநீரைத் திறந்துவிடுவது தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர், இரவு 7.10 மணிக்கு சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் இருந்து புறப்படும் முதல்வர் விஜய், உத்சவ் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.