ஆதம்பாக்கத்தில் 5 நாட்கள் போக்குவரத்து மாற்றம்: வெளியான முக்கிய தகவல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
11 Nov 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 11 Nov 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆதம்பாக்கத்தில் 5 நாட்கள் போக்குவரத்து மாற்றம்: வெளியான முக்கிய தகவல்

ஆதம்பாக்கத்தில் 5 நாட்கள் போக்குவரத்து மாற்றம்: வெளியான முக்கிய தகவல்

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் கழிவுநீர் பிரதானக் குழாய் சீரமைப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், இன்று (புதன்கிழமை) முதல் வரும் 15-ம் தேதி வரை 5 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆதம்பாக்கம் மஸ்தான்கோரி சாலையில் டாக்டர் அம்பேத்கர் சிலை சந்திப்பு அருகே அமைந்துள்ள ஆர்.சி.சி. கழிவுநீர் பிரதானக் குழாயில் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரிசெய்யும் பணியின் ஒரு பகுதியாக, சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் சார்பில் சாலையின் மையப்பகுதியில் பள்ளம் தோண்டி புதிய கழிவுநீர் குழாய் இணைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் மாற்றுப் பாதைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாற்றுப் பாதைகள் விவரம்: - ஆதம்பாக்கம் கக்கன் நகர் பிரதான சாலையில் இருந்து ஆபீசர்ஸ் காலனி பிரதான சாலை, மஸ்தான்கோரி சாலை சந்திப்பு வழியாக பரங்கிமலை ரயில் நிலையத்துக்குச் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும், அரசு பேருந்துகள் உட்பட, அனுமதி இல்லை. - இதற்குப் பதிலாக, கக்கன் நகர் பிரதான சாலை, ஏரிக்கரை சாலை, பிருந்தாவன் நகர் பிரதான சாலை, பாலாஜி நகர் பிரதான சாலை வழியாகச் சென்று, எம்.ஆர்.டி.எஸ். சாலையில் இடதுபுறம் திரும்பி பயணிக்கலாம். - பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து என்.ஜி.ஓ. காலனிக்குச் செல்லும் வாகனங்கள், மேடவாக்கம் பிரதான சாலை வழியாக எம்.ஆர்.டி.எஸ். சாலையை அடைந்து இடதுபுறம் திரும்ப வேண்டும். தொடர்ந்து எம்.ஆர்.டி.எஸ். சாலை, பாலாஜி நகர் பிரதான சாலை, பிருந்தாவன் நகர் பிரதான சாலை, ஏரிக்கரை சாலை, கக்கன் நகர் பிரதான சாலை வழியாகச் செல்லலாம். எனவே, இந்த 5 நாட்களும் ஆதம்பாக்கம் பகுதியில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றுப் பாதைகளைப் பயன்படுத்துமாறும், போக்குவரத்து மாற்றங்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறும் சென்னை போக்குவரத்து போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.