ஆண்டிற்கு ரூ.559 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் விபத்துக் காப்பீடு: தூத்துக்குடி தபால் கோட்டத்தில் அறிமுகம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆண்டிற்கு ரூ.559 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் விபத்துக் காப்பீடு: தூத்துக்குடி தபால் கோட்டத்தில் அறிமுகம்

ஆண்டிற்கு ரூ.559 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் விபத்துக் காப்பீடு: தூத்துக்குடி தபால் கோட்டத்தில் அறிமுகம்

தூத்துக்குடி தபால் கோட்டத்தில் குறைந்த பிரீமியத்தில் ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரையிலான விபத்துக் காப்பீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்தத் திட்டங்களில் சேர்ந்து பயன்பெறுமாறு தூத்துக்குடி தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி (IPPB), பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து இரண்டு வகையான விபத்துக் காப்பீட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் ரூ.10 லட்சம் காப்பீட்டுக்கு ஆண்டுக்கு ரூ.559 பிரீமியமும், ரூ.15 லட்சம் காப்பீட்டுக்கு ஆண்டுக்கு ரூ.759 பிரீமியமும் செலுத்த வேண்டும். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பொதுமக்கள் எளிதில் பயன்பெறும் வகையில், தபால் அலுவலகங்கள், தபால்காரர்கள் மற்றும் கிராம தபால் ஊழியர்கள் (GDS) மூலமாக இந்தக் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படுகிறது. 18 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இத்திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள். விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட காகித ஆவணங்கள் தேவையில்லை. தபால்காரரிடம் உள்ள ஸ்மார்ட்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் உதவியுடன், சுமார் 5 நிமிடங்களில் முழுமையாக டிஜிட்டல் முறையில் காப்பீட்டுப் பாலிசியைப் பெறலாம். ஆண்டுக்கு ரூ.559 அல்லது ரூ.759 என்ற குறைந்த பிரீமியத்தில் கிடைக்கும் இந்த விபத்துக் காப்பீடு, எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் உடல்நலம் மற்றும் பொருளாதார பாதிப்புகள், உயிரிழப்பு உள்ளிட்ட சூழ்நிலைகளில் குடும்பத்துக்கு பாதுகாப்பாக அமையும். எனவே, பொதுமக்கள் அருகிலுள்ள தபால் அலுவலகம் அல்லது தபால்காரரை அணுகி இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.