ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Sep 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Sep 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டி: இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேற்றம்

2026 ஆசிய விளையாட்டு போட்டியின் பெண்கள் ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இளம் வீராங்கனை அனாஹத் சிங் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். காலிறுதிப் போட்டியில் சக இந்திய வீராங்கனையான தன்வி கண்ணாவுடன் அனாஹத் சிங் மோதினார். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், தொடர்ந்து புள்ளிகளை குவித்து முன்னிலை பெற்றார். இறுதியில் 11-2, 11-5, 11-3 என்ற செட் கணக்கில் தன்வி கண்ணாவை வீழ்த்தி 3-0 என்ற நேர் செட் வெற்றியைப் பதிவு செய்தார். அரையிறுதியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை சடோமி வதனாபேவை அனாஹத் சிங் எதிர்கொள்ள உள்ளார்.