ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய அனாஹத் சிங்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
24 Sep 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 24 Sep 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய அனாஹத் சிங்

ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய அனாஹத் சிங்

20-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவின் இளம் ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங், பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் சிங்கப்பூரின் ஆவ் யோங் வை இயனை எதிர்த்து அனாஹத் சிங் விளையாடினார். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 11-4, 11-5, 11-7 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் காலிறுதிக்கு முன்னேறினார். இதனிடையே, மற்றொரு இந்திய வீராங்கனையான தன்வி கண்ணாவும் சிங்கப்பூர் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.