ஆசிய விளையாட்டு போட்டி: வீரர்கள் தேர்வில் விதிமுறைகளை தளர்த்த முடியாது என மத்திய அரசு திட்டவட்டம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆசிய விளையாட்டு போட்டி: வீரர்கள் தேர்வில் விதிமுறைகளை தளர்த்த முடியாது என மத்திய அரசு திட்டவட்டம்

ஆசிய விளையாட்டு போட்டி: வீரர்கள் தேர்வில் விதிமுறைகளை தளர்த்த முடியாது என மத்திய அரசு திட்டவட்டம்

20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இந்த தொடரில் பங்கேற்க இந்தியா சார்பில் 492 பேர் கொண்ட அணி அனுப்பப்படுகிறது. மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகே அணியின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தடகளப் பிரிவில் நீரஜ் சோப்ரா, பிரவீன் சித்ரவேல் உள்ளிட்ட 73 பேர் அதிகபட்சமாக இடம்பெற்றுள்ளனர்.இந்நிலையில், திறமை வாய்ந்த சில வீரர், வீராங்கனைகளுக்கு அணியில் இடம் வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்துள்ளது. குறிப்பாக டென்னிஸ் வீரர்களை தேர்வு செய்வதில், ஆசிய அளவிலான தரவரிசையில் முதல் 8 இடங்களுக்குள் இருப்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்படும் என்ற வழிகாட்டுதலை விளையாட்டு அமைச்சகம் வகுத்துள்ளது. இந்த விதிமுறையால் மானஸ் தம்னே, வைஷ்ணவி அட்கர், சஹஜா யமலபள்ளி, வைதேகி சவுத்ரி, பிரார்த்தனா தோம்பரே உள்ளிட்ட வளர்ந்து வரும் வீரர்களுக்கு ஆசிய போட்டி அணியில் இடம் கிடைக்கவில்லை.இதற்கு இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா அதிருப்தி தெரிவித்துள்ளார். புதிய விதிமுறைகள் வீரர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும் என அவர் கவலை தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுவிட்டால், தகுதிச் சுற்றுகளும் தரவரிசையும் எதற்காக என்ற கேள்வியையும் அவர் எழுப்பியிருந்தார். மேலும், பதக்கம் வெல்லும் வாய்ப்பு இல்லை என வீரர்களிடம் கூறுவது மட்டுமின்றி, அவர்களின் பெற்றோர் மற்றும் ஸ்பான்சர்களின் ஆதரவுக்கும் மதிப்பில்லை என்ற செய்தியை அளிப்பது போன்றதாகும் என்றும் அவர் விமர்சித்திருந்தார்.இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் நேற்று விளக்கம் அளித்தன. அணி தேர்வை இறுதி செய்வதில் தங்களுக்கு அதிக அழுத்தம் இருந்ததாக தெரிவித்த அந்த வட்டாரங்கள், சில பெற்றோர் தங்கள் பிள்ளைகள் தேர்வு செய்யப்படவில்லை என புகார் அளித்ததாக கூறின.தேர்வு விதிமுறைகளுக்கு வீரர்கள் தகுதி பெற்றிருந்தால், அவர்களின் பெயர் விடுபட வாய்ப்பில்லை எனபெற்றோரிடம்தெரிவிக்கப்பட்டதாகவும்அமைச்சகவட்டாரங்கள்கூறின.தடகளத்தில்நிர்ணயிக்கப்பட்டஅளவுகோலைவிளக்குவதற்காக100மீட்டர்ஓட்டப்பந்தயத்தை உதாரணமாக அவர்கள் குறிப்பிட்டனர். பதக்கம் வெல்லும் வாய்ப்புக்காக 10 வினாடிகளுக்குள் ஓட வேண்டிய நிலையில், 15 வினாடிகளில் ஓடும் வீரரை அனுப்புவது சரியான தேர்வாக இருக்குமா என கேள்வி எழுப்பினர். அதனால், தடகளத்தில் ஆசிய அளவில் முதல் 6 இடங்களுக்குள் உள்ளவர்களையே தேர்வு செய்வது அல்லது அந்த அளவுகோலை பூர்த்தி செய்யாதவர்களை தேர்வு செய்யாமல் இருப்பது என்ற நடைமுறை பின்பற்றப்படுவதாக தெரிவித்தனர்.இந்த தேர்வு விதிமுறைகள் ஒரு ஆண்டுக்கு முன்பே அறிவிக்கப்பட்டதாகவும், அவற்றை அறிந்து அதற்கேற்ப தயாராகிக் கொள்ள வீரர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட்டதாகவும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.எனவே, தற்போதுள்ள விதிமுறைகளில் எந்தவித தளர்வும் செய்யும் எண்ணம் இல்லை என்றும் மத்திய விளையாட்டு அமைச்சக வட்டாரங்கள் திட்டவட்டமாக கூறியுள்ளன.