ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் ட்ராப் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. நீரு, ஆஷிமா அஹலாவத், மனிஷா கீர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 328 புள்ளிகளைப் பெற்று 2-வது இடத்தை பிடித்தது. 346 புள்ளிகளுடன் சீன அணி தங்கப் பதக்கத்தையும், 325 புள்ளிகளுடன் குவைத் அணி வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றின. இந்திய வீராங்கனைகளில் நீரு 125-க்கு 118 புள்ளிகளும், ஆஷிமா அஹலாவத் 125-க்கு 106 புள்ளிகளும், மனிஷா கீர் 125-க்கு 104 புள்ளிகளும் பெற்றனர்.