ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில், மகளிருக்கான 50 மீட்டர் 3 பொசிஷன்ஸ் துப்பாக்கி சுடுதல் அணிகள் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியது. திலோத்தமா சென், விதர்சா வினோத் கோச்சலும்கல், ஆஷி சௌக்ஷே ஆகியோர் இடம்பெற்ற இந்திய அணி, மொத்தம் 1763 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தது. இதனிடையே, திலோத்தமா சென் மற்றும் விதர்சா வினோத் ஆகியோர் தனிநபர் தகுதிச்சுற்றிலும் சிறப்பாக செயல்பட்டு இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர்.