ஆசிய விளையாட்டு: தமிழக வீராங்கனை கமலினிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
22 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 22 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆசிய விளையாட்டு: தமிழக வீராங்கனை கமலினிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

ஆசிய விளையாட்டு: தமிழக வீராங்கனை கமலினிக்கு டிடிவி தினகரன் வாழ்த்து

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த வெற்றிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், அந்த அணியில் இடம்பெற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு போட்டியிலும் நம்பிக்கையுடன் விளையாடி, சவாலான நேரங்களிலும் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் பெருமையை உலக அளவில் உயர்த்தியுள்ள மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றிப் பயணம் தொடர்ந்து சிறக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.