ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் 45 நாடுகள் பங்கேற்கும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற பெண்களுக்கான தனிநபர் கோல்ப் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பிரணவி உர்ஸ் தங்கப் பதக்கம் வென்றார். இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் தனிநபர் கோல்ப் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை பிரணவி உர்ஸ் படைத்துள்ளார்.