ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. போட்டியின் 13-வது நாளான நேற்று இந்தியாவுக்கு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் மட்டுமே கிடைத்தன. இதற்கு முந்தைய நாள் இந்திய அணி 4 தங்கப் பதக்கங்களை கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், வில்வித்தையின் கலப்பு அணி ரிகர்வ் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தப் பிரிவில் இந்தியா பதக்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.