6 அணிகள் பங்கேற்கும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி, பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மற்றும் மொகாலியில் அக்டோபர் 27-ந்தேதி முதல் நவம்பர் 5-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான தற்போதைய உணர்வுபூர்வமான சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு, போட்டியை இரு நாடுகளுக்கும் பொதுவான இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று பாகிஸ்தான் ஆக்கி சம்மேளனம், ஆசிய ஆக்கி சம்மேளனத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பின் இந்த எதிர்ப்பால், திட்டமிட்டபடி போட்டியை இந்தியாவில் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.