ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியா
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Sep 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Sep 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியா

ஆசிய விளையாட்டு: துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியா

ஜப்பானின் அய்ச்சி மாகாணத்தில் உள்ள நகோயா நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியின் மகளிர் டிராப் தனிநபர் பிரிவில் இந்திய வீராங்கனை நீரு தண்டா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். புதிய ஆசிய சாதனையுடன் தங்கம் வென்ற நீரு தண்டா, ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் டிராப் தனிநபர் பிரிவில் தங்கம் கைப்பற்றிய முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் தங்கப் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இந்தியா மொத்தம் 46 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளது.