ஆசனூர் மலைப்பகுதியில் சிறுத்தை அட்டகாசம்: மலைக்கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
13 Oct 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 13 Oct 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

ஆசனூர் மலைப்பகுதியில் சிறுத்தை அட்டகாசம்: மலைக்கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஆசனூர் மலைப்பகுதியில் சிறுத்தை அட்டகாசம்: மலைக்கிராம மக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் மலைப்பகுதியில் மனிதர்களைத் தாக்கும் சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், மலைக்கிராம மக்கள் இரவு நேரங்களில் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் பங்களாதொட்டி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி என்ற கூலித் தொழிலாளி, கடந்த 3-ந்தேதி சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆசனூர், அரப்பாளையம், சென்டர் தொட்டி, ஓங்களவாடி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மனிதர்களைத் தாக்கிய சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதி மற்றும் புதர்களுக்குள் சிறுத்தை பதுங்கியுள்ளதா என்பதைக் கண்டறிய நவீன தெர்மல் டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்படுகின்றன. மேலும், பல்வேறு இடங்களில் கேமரா டிராப் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சிறுத்தையின் நடமாட்டத்தை 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே, மலைக்கிராம மக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவசரத் தேவைகளுக்காக வெளியே செல்லும்போது குழுவாகச் செல்ல வேண்டும் என்றும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். பாதுகாப்பு நடவடிக்கையாக, அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைகள் மாலை 7 மணிக்குள் மூடப்பட்டன. மேலும், சிறுத்தை அல்லது பிற வனவிலங்குகளின் நடமாட்டம் குறித்த தகவல்கள் கிடைத்தால் உடனடியாக வனத்துறையினருக்குத் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.