அர்ஜுன் தாஸ் நடித்த ‘ஜான் டோ’ படத்தின் டிரெய்லர் வெளியீடு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
03 Nov 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 03 Nov 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அர்ஜுன் தாஸ் நடித்த ‘ஜான் டோ’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

அர்ஜுன் தாஸ் நடித்த ‘ஜான் டோ’ படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள ‘ஜான் டோ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தை இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார். அர்ஜுன் தாஸுடன் சஞ்சனா நடராஜன், சிருஷ்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குற்றப் பின்னணியில் விறுவிறுப்பான த்ரில்லர் படமாக இது உருவாகியுள்ளது. ‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாத் தேவினேனி மற்றும் சோபு யார்லகட்டா ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மதுமிதா, நிக்கோலஸ் செவாலியருடன் இணைந்து உருவாக்கியுள்ளனர். முஜீப் மஜீத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் வெங்கடராமன் படத்தொகுப்புப் பணியையும், தினேஷ் சுப்பராயன் சண்டைப் பயிற்சிப் பணிகளையும் மேற்கொண்டுள்ளனர். இதற்கிடையே, ‘ஜான் டோ’ திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை ஜீ தமிழும், ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸும் பெற்றுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் 13-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அதிரடியும் பரபரப்பும் நிறைந்த காட்சிகளுடன் வெளியாகியுள்ள இந்த டிரெய்லர், திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.