அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

17 Sep 2026 www.thinathulir.com

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை

அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜை

நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கும் இப்படத்தில் ப்ரீத்தி பகதாலா கதாநாயகியாக நடிக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘கைதி’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் அர்ஜுன் தாஸ். இந்தப் படத்திற்காக தமிழக அரசின் சிறந்த வில்லன் நடிகர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். தொடர்ந்து ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை உருவாக்கினார். இதுதவிர ‘அநீதி’, ‘ரசவாதி’, ‘போர்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த ‘கான் சிட்டி’, ‘ஒன்ஸ்மோர்’ ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின. ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘மைக்கேல்’ ஆகிய படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி, இப்படத்தை இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் ப்ரீத்தி பகதாலா தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் வலுவான கதாபாத்திரங்களைக் கொண்ட குடும்ப ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது. கே. எஸ். ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் மற்றும் பாப் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளதால், படக்குழுவினர் உற்சாகத்தில் உள்ளனர்.