அரசு பேருந்து மோதியதில் பள்ளி மாணவி படுகாயம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
09 Oct 2026, வெள்ளி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 09 Oct 2026, Friday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அரசு பேருந்து மோதியதில் பள்ளி மாணவி படுகாயம்

அரசு பேருந்து மோதியதில் பள்ளி மாணவி படுகாயம்

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே அரசு பேருந்து மோதிய விபத்தில் பள்ளி மாணவி ஒருவர் பலத்த காயமடைந்தார். திருவம்பாடி பேருந்து நிலையத்திற்கு அரசு பேருந்து வந்துகொண்டிருந்தது. அப்போது பேருந்தைத் திருப்பியபோது, அந்த வழியாக நடந்து சென்ற பள்ளி மாணவி மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த மாணவியின் காலில் பேருந்தின் சக்கரம் ஏறி இறங்கியது. இதனால் அவர் பலத்த காயமடைந்தார். விபத்தைத் தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் காயமடைந்த மாணவியை மீட்டு, சிகிச்சைக்காக திருவம்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.