அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை: இன்று முதல் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

07 Sep 2026 www.thinathulir.com

அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை: இன்று முதல் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

அரசு கல்வியியல் கல்லூரிகளில் 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை: இன்று முதல் 15-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். படிப்புகளுக்கான 2-ம் கட்ட மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இன்று (செப்டம்பர் 7) தொடங்குகிறது. மாணவர்கள் செப்டம்பர் 15-ந்தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பெ. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். முதல் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 70 இடங்களும், 10 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 508 இடங்களும் காலியாக உள்ளன. இதன்படி, மொத்தம் 578 பி.எட். இடங்கள் நிரப்பப்பட வேண்டியுள்ளது. இந்த காலியிடங்களை நிரப்புவதற்காக 2-ம் கட்ட மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 7 முதல் செப்டம்பர் 15 வரை நடைபெறுகிறது. பி.எட். படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி [www.tngasa.in](http://www.tngasa.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அரசு உதவி பெறும் 10 கல்வியியல் கல்லூரிகள் 1. அன்னம்மாள் மகளிர் கல்வியியல் கல்லூரி, தூத்துக்குடி 2. என்.கே.டி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி, திருவல்லிக்கேணி 3. ஸ்ரீ ஆர்.கே.எம்.வி. ஆடவர் கல்வியியல் கல்லூரி, கோயம்புத்தூர் 4. வ.உ.சி. கல்வியியல் கல்லூரி, தூத்துக்குடி 5. மெஸ்டன் கல்வியியல் கல்லூரி (இருபாலர்), ராயப்பேட்டை 6. தூய சேவியர் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை 7. ஸ்டெல்லா மேட்டிடுனா கல்வியியல் கல்லூரி, அசோக் நகர் 8. தூய கிறிஸ்டோபர் கல்வியியல் கல்லூரி, வேப்பேரி 9. தூய இக்னேஷியஸ் மகளிர் கல்வியியல் கல்லூரி, பாளையங்கோட்டை 10. என்.வி.கே.எஸ்.டி. கல்வியியல் கல்லூரி, ஆத்தூர், திருவட்டாறு மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரிகளில் பி.எட். பாடப்பிரிவில் உள்ள காலியிடங்களை அறிந்து, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.