அரசு கல்லூரிகளில் 6,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்: தமிழக அரசின் முடிவுக்கு சி.பி.ஐ. வரவேற்பு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Aug 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Aug 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அரசு கல்லூரிகளில் 6,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்: தமிழக அரசின் முடிவுக்கு சி.பி.ஐ. வரவேற்பு

அரசு கல்லூரிகளில் 6,000 உதவிப் பேராசிரியர்கள் நியமனம்: தமிழக அரசின் முடிவுக்கு சி.பி.ஐ. வரவேற்பு

தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் 6,000 உதவிப் பேராசிரியர்களை மூன்று கட்டங்களாக நியமிக்க உள்ளதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வரவேற்றுள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உதவிப் பேராசிரியர் பணியிடங்களைவிரைந்துநிரப்பவேண்டும்எனவலியுறுத்தியுள்ளார்.மேலும், அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்படும் என்றும், பல்வேறு தொழில்நுட்பக் கல்லூரிகளில் பணிபுரியும் பகுதி நேர விரிவுரையாளர்களின் தொகுப்பூதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்திருந்தார். இந்த முடிவையும் சி.பி.ஐ. வரவேற்றுள்ளது.அதேவேளையில், ரூ.5 ஆயிரம் மட்டுமே உயர்த்தப்படுவது தற்போதைய வாழ்க்கைச் சூழலில் போதுமானதாக இருக்காது என்பதால், ஊதிய உயர்வை மேலும் அதிகரிக்க வேண்டும் என மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.இந்த உயர்வு பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ மற்றும் பகுதி நேர விரிவுரையாளர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு கல்லூரிகளில் பணிபுரியும் பகுதி நேர மற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஆண்டில் 7 முதல் 8 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில், 12 மாதங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பெண் விரிவுரையாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் பேரவைத் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு கல்வி உத்தரவாத திட்டத்தின் கீழ் நடப்பு கல்வியாண்டு முதல் ரூ.20 லட்சம் வரை பிணையற்ற கல்விக் கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வரவேற்றுள்ளார். இந்தக் கடன் எந்தத் தடையும் இன்றி வட்டியில்லாமல் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.இதேபோல், 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு கல்வி வழங்கப்படும் என்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனின் அறிவிப்பையும், 2,771 உடற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பையும் சி.பி.ஐ. வரவேற்றுள்ளது. அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதிக்கு முன்பாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து முழுமையான நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கும் வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தீர்மானத்தின் மூலம் சுமார் 3 லட்சத்து 28 ஆயிரத்து 701 அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பயனடைவார்கள் என்றும், 15 முதல் 20 ஆண்டுகள் வரை பணியாற்றிய அனுபவமிக்க ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.இதற்காக கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009-ன் பிரிவு 23-ல் உரிய மாற்றம் செய்யவும், தேசிய ஆசிரியர் கல்விப் பேரவை மூலம் தேவையான சுற்றறிக்கையை வெளியிடவும் மத்திய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.