அரசு அறிவித்த புதிய சீருடையை அணிய மறுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள்... என்ன காரணம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
31 Oct 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 31 Oct 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அரசு அறிவித்த புதிய சீருடையை அணிய மறுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள்... என்ன காரணம்

அரசு அறிவித்த புதிய சீருடையை அணிய மறுக்கும் டாஸ்மாக் ஊழியர்கள்... என்ன காரணம்

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 4,048 டாஸ்மாக் கடைகளில் 22,877 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு புதிய சீருடை வழங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு இளநீல நிறச் சட்டை மற்றும் அடர் நீல நிற பேண்ட், விற்பனையாளர்களுக்கு இளம்பழுப்பு நிறச் சட்டை மற்றும் கருஞ்சாம்பல் நிற பேண்ட் என சீருடை நிறங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும், மூன்று செட் சீருடைகள் வாங்குவதற்காக ஒவ்வொரு ஊழியரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ.6,000 செலுத்தப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சீருடைக்கான துணிகளை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை சீருடைக்கான துணிகள் கிடைக்கவில்லை எனக் கூறும் ஊழியர்கள், புதிய சீருடையை அணிய முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த உடையை அணிவதால் பொதுமக்கள் மத்தியில் தங்களை மதுக்கடை ஊழியர்கள் என எளிதில் அடையாளம் காணும் நிலை ஏற்படும் என்பது அவர்களது கவலையாக உள்ளது. குறிப்பாக, கடைகளில் வசூலாகும் பணத்தை வங்கியில் செலுத்தச் செல்லும்போது, சீருடை அணிந்திருப்பதால் கொள்ளையர்கள் தங்களை எளிதில் அடையாளம் கண்டு வழிப்பறியில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, வரும் 15-ஆம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் கட்டாயம் புதிய சீருடையை அணிய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைப் பின்பற்றாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஏற்கெனவே வழங்கப்பட்ட ரூ.6,000 தொகை திரும்பப் பெறப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.