அரசியல் களத்தில் தனுஷ்..? ரசிகர் மன்றத்தை வலுப்படுத்த தீவிரம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
25 Aug 2026, செவ்வாய் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 25 Aug 2026, Tuesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அரசியல் களத்தில் தனுஷ்..? ரசிகர் மன்றத்தை வலுப்படுத்த தீவிரம்

அரசியல் களத்தில் தனுஷ்..? ரசிகர் மன்றத்தை வலுப்படுத்த தீவிரம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ள தனுஷ், தொடர்ந்து திரைப்படப் பணிகளில் கவனம் செலுத்தி வரும் நிலையில், தனது ரசிகர் நற்பணி மன்றத்தின் செயல்பாடுகளையும் தீவிரப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.தனுஷ் ரசிகர் மன்றங்கள் சார்பில் பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே, மன்ற நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து தனுஷ் ஆலோசனைகளையும் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.இந்த சூழலில், தொகுதி வாரியாக நற்பணி மன்றங்களை அமைப்பதுடன், அதிகளவில் புதிய உறுப்பினர்களை இணைக்கவும் மன்ற நிர்வாகிகளிடம் தனுஷ் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது ரசிகர் மன்ற செயல்பாடுகள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.மேலும், தனுஷ் சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல் பரவி வருகிறது. எதிர்காலத்தில் ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவது தொடர்பாகவே இந்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.அதுமட்டுமின்றி, புதிய அரசியல் அமைப்புக்கு பெயர் சூட்டுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், தனுஷ் தரப்பில் இதுவரை அரசியல் கட்சி தொடங்குவது குறித்து எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.