அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபரை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள்!
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
26 Sep 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 26 Sep 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபரை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள்!

அரசுப் பேருந்தின் கண்ணாடியை உடைத்த வாலிபரை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள்!

ஈரோடு மாவட்டம் மொடச்சூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், கார்மெண்ட்ஸ் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு வீட்டுக்குச் செல்வதற்காக அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மொடச்சூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல், சற்று தொலைவில் சென்று நின்றதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயன், பேருந்தை முறையாக நிறுத்தவில்லை எனக் கூறி ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் தீவிரமடைந்த நிலையில், கார்த்திகேயன் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர், அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து சம்பவம் குறித்து கோபிசெட்டிப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பேருந்து ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கார்த்திகேயனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் பொது சொத்தை சேதப்படுத்துதல், அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.