அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான மனு வாபஸ்: சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
12 Oct 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 12 Oct 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான மனு வாபஸ்: சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி

அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிரான மனு வாபஸ்: சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி

கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் பள்ளிகளுக்கு அனுமதி பெற லஞ்சம் வழங்கப்பட்டதாக சட்டப்பேரவையில் பேசிய நிதியமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் மரிய வில்சன், பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்காக லஞ்சம் பெறப்பட்ட சம்பவத்துக்கு தானே நேரடி சாட்சி எனத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இந்தக் கருத்தின் அடிப்படையில், அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் கே. சிவசுப்பிரமணியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், லஞ்சம் பெறுவது மட்டுமின்றி, லஞ்சம் கொடுப்பதும் சட்டப்படி குற்றம் என்பதால், அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்ததாக மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். மேலும், சட்டப்பேரவையில் அமைச்சர் தெரிவித்த கருத்தை அரசியல் பேச்சாக மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவையில் பேசுவதற்காக வழங்கப்படும் சட்டப் பாதுகாப்பு, சட்டப்பேரவைக்கு வெளியே நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்களுக்குப் பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில், தனது புகாரைப் பரிசீலித்து அமைச்சர் மீது வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது. இந்தப் பொதுநல மனு இன்று சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மனு வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.