அமைச்சரவைக் கூட்டத்தில் என்னென்ன ஆலோசிக்கப்பட்டது? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
29 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 29 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அமைச்சரவைக் கூட்டத்தில் என்னென்ன ஆலோசிக்கப்பட்டது? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

அமைச்சரவைக் கூட்டத்தில் என்னென்ன ஆலோசிக்கப்பட்டது? – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். கூட்டம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து விளக்கமளித்தார். சமூகநீதிக் கணக்காய்வு நடத்த முடிவு இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்கள் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைப் பெற முடியாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நிர்மல் குமார் தெரிவித்தார். மேலும், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிறைவடைந்த பிறகு, பிப்ரவரி மாதத்தில் ஆணையம் அமைத்து சமூகநீதிக் கணக்காய்வு நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். சமூகநீதி தொடர்பான விவரங்களுடன் சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும் என விளக்கினார். தாழம்பூர் நில விவகாரம் குறித்து ஆலோசனை தாழம்பூரில் 600 ஏக்கர் நிலங்களுக்கான பட்டாக்கள் மாற்றப்பட்ட விவகாரத்தில் உரிய முடிவை எடுக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிலங்கள் குறித்து ஆய்வு செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். 8 நிறுவனங்களுக்கு அனுமதி; மின்வாரியத்தில் 8,000 பேர் நியமனம் மக்களின் தேவைகளை அறிந்து அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்று முதல்-அமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக நிர்மல் குமார் கூறினார். மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்க 8 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மின்வாரியத்தில் 8,000 கள உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பேராசிரியர் கலையரசனிடம் காவல்துறை நடந்துகொண்ட விதம் தவறு பேராசிரியர் கலையரசனை காவல்துறையினர் அலைக்கழித்தது தவறான நடவடிக்கை என்று அமைச்சர் விமர்சித்தார். காவல் நிலையத்தில் அவருக்கு நேர்ந்த சம்பவங்களும் தவறானவை என்றும், இது தொடர்பாகத் தானும் பேராசிரியரிடம் பேசியுள்ளதாகவும் குறிப்பிட்டார். திமுகவினர் மீது விமர்சனம்; அன்பில் மகேஸிடம் மன்னிப்பு கோரிக்கை தவறு செய்யும் திமுகவினரைக் கேள்வி கேட்கக்கூடாதா எனக் கேள்வி எழுப்பிய நிர்மல் குமார், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளில் சமரசம் செய்து சான்றிதழ்கள் வழங்கியதன் மூலம் ரூ.400 கோடி லஞ்சம் பெறப்பட்டதாகக் குற்றம்சாட்டினார். மேலும், பள்ளிகளை மிரட்டிப் பணம் பறித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.