அமெரிக்காவில் பறந்து வந்த ராட்சத டயர்; காரை நொறுக்கியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அமெரிக்காவில் பறந்து வந்த ராட்சத டயர்; காரை நொறுக்கியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்

அமெரிக்காவில் பறந்து வந்த ராட்சத டயர்; காரை நொறுக்கியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய குடும்பம்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள இன்டர்ஸ்டேட் 76 நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்திசையில் சென்ற வாகனத்தில் இருந்து கழன்று வந்த ராட்சத டயர், காற்றில் பறந்து வந்து எதிரே பயணித்த எஸ்யூவி காரின் மீது மோதியதில் அதன் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது.பிலடெல்பியாவில் மேற்கு நோக்கிச் சென்ற நிசான் ரக எஸ்யூவி கார் பயணித்துக் கொண்டிருந்தபோது, சாலையின் மறுபுறம் சென்ற அடையாளம் தெரியாத ஒரு வாகனத்தில் இருந்து பெரிய டயர் ஒன்று திடீரென கழன்று உருண்டது. பின்னர் கட்டுப்பாட்டை இழந்த அந்த டயர், நடுவே அமைந்திருந்த கான்கிரீட் தடுப்பைக் கடந்து, அதிவேகத்தில் காற்றில் பறந்து வந்து எஸ்யூவி காரின் முன்பகுதியில் நேரடியாக மோதியது.இந்த தாக்குதலால் காரின் முன்பகுதி கடுமையாக நொறுங்கியதுடன், முன்பக்க விண்ட்ஷீல்டு கண்ணாடியும் சிதறியது. இந்த விபத்து நிகழ்ந்த தருணம், அந்த வழியாகச் சென்ற மற்றொரு டெஸ்லா காரின் டேஷ்கேம் கேமராவில் பதிவாகியுள்ளது.விபத்து மிகவும் தீவிரமாக இருந்தபோதிலும், காரை ஓட்டியவர் மற்றும் அதில் பயணித்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்த சம்பவம் குறித்து பென்சில்வேனியா மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டயர் எந்த வாகனத்தில் இருந்து கழன்று வந்தது என்பதை கண்டறிய, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் பிற வாகனங்களின் டேஷ்கேம் பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.