அமெரிக்க அரசியலில் புதிய மைல்கல்: துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் – உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறந்தது
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

20 Jul 2026 www.thinathulir.com

அமெரிக்க அரசியலில் புதிய மைல்கல்: துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் – உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறந்தது

அமெரிக்க அரசியலில் புதிய மைல்கல்: துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் – உஷா தம்பதிக்கு 4-வது குழந்தை பிறந்தது

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் தம்பதியருக்கு நான்காவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. புதிதாக பிறந்த குழந்தைக்கு 'அலெக் நீல் வான்ஸ்' (Alec Neil Vance) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அவரது நிர்வாகத்தில் ஜே.டி. வான்ஸ் துணை அதிபராக செயல்பட்டு வருகிறார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷா வான்ஸை அவர் திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஈவான், விவேக் என்ற இரு மகன்களும், மிராபெல் என்ற ஒரு மகளும் உள்ளனர்.உஷா வான்ஸ் கர்ப்பமாக இருந்த நிலையில், பிரசவத்திற்காக மேரிலாந்தில் உள்ள வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்தில் உதவிய மருத்துவர்கள் மற்றும் வெள்ளை மாளிகை மருத்துவக் குழுவினருக்கு ஜே.டி. வான்ஸ் தம்பதியர் நன்றியை தெரிவித்துள்ளனர்.குழந்தை பிறந்த மகிழ்ச்சியை ஜே.டி. வான்ஸ் தனது 'எக்ஸ்' சமூக வலைதளப் பதிவின் மூலம் பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கும் உஷாவுக்கும் நான்காவது குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவனுக்கு 'அலெக் நீல் வான்ஸ்' என்று பெயரிட்டுள்ளோம். தாயும் குழந்தையும் நல்ல உடல்நலத்துடன் உள்ளனர். எங்கள் மற்ற மூன்று குழந்தைகளும் தங்களின் தம்பியை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர் உஷா வான்ஸ். யாலே சட்டப் பள்ளியில் கல்வி பயின்றபோது ஜே.டி. வான்ஸுடன் அறிமுகமாகி, பின்னர் இருவரும் நெருக்கமான நண்பர்களாகினர். 2013-ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்த அவர்கள், அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம் இந்து மற்றும் கத்தோலிக்க மரபுகளின்படி நடைபெற்றது.குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பேசிய ஜே.டி. வான்ஸ், “துணை அதிபராக பொறுப்பேற்பதற்கு முன்பே நமக்கு நான்காவது குழந்தை வேண்டும் என்று உஷாவிடம் கூறியிருந்தேன். அதற்கு அவர், ‘நீங்கள் அமெரிக்காவின் துணை அதிபராகலாம் அல்லது நான்காவது குழந்தையைப் பெறலாம்; இரண்டையும் ஒரே நேரத்தில் பெற முடியாது’ என்று நகைச்சுவையாக சொன்னார். ஆனால் இப்போது அந்த இரண்டு மகிழ்ச்சியும் எனக்கு கிடைத்துவிட்டது” என்று சிரித்தபடி தெரிவித்தார்.அமெரிக்க அரசியல் வரலாற்றிலும் இந்த நிகழ்வு குறிப்பிடத்தக்கதாக அமைந்துள்ளது. கடந்த சுமார் 150 ஆண்டுகளில் பதவியில் இருக்கும் அமெரிக்க துணை அதிபருக்கு குழந்தை பிறந்திருப்பது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இதற்கு முன்பு 1870-ஆம் ஆண்டு துணை அதிபராக இருந்த ஷூய்லர் கோல்பேக்ஸுக்கு பதவிக் காலத்திலேயே குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.ஜே.டி. வான்ஸ் – உஷா தம்பதியருக்கு உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.