அமித்ஷாவுக்கு கேள்விகளை எதிர்கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம்? - மாணிக்கம் தாகூர்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
10 Aug 2026, திங்கள் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 10 Aug 2026, Monday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அமித்ஷாவுக்கு கேள்விகளை எதிர்கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம்? - மாணிக்கம் தாகூர்

அமித்ஷாவுக்கு கேள்விகளை எதிர்கொள்ள ஏன் இவ்வளவு தயக்கம்? - மாணிக்கம் தாகூர்

உள்துறை மந்திரி அமித்ஷா, ஜூலை 21-ம் தேதி முதல் நாடாளுமன்றத்திற்கு வராமல் இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் விமர்சித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், நாடாளுமன்றத்தில் இன்று அரசின் அவசர மற்றும் முக்கிய நடவடிக்கைகளுக்காக வெளியிடப்பட்ட கூடுதல் அலுவல் பட்டியலில், அமித்ஷா பெயரில் இரண்டு முக்கிய மசோதாக்கள் இடம்பெற்றிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.‘The Kerala (Alteration of Name) Bill, 2026’ மற்றும் ‘The National Co-operative Development Corporation (Amendment) Bill,2026’ஆகியஇருமசோதாக்களும்அறிமுகம்செய்யப்படுவதற்காகபட்டியலிடப்பட்டிருந்தன.ஆனால், ஜூலை 21-ம் தேதி முதல் நாடாளுமன்றத்திற்கு வராமல் இருக்கும் அமித்ஷா, தனது பெயரில் மசோதாக்கள் பட்டியலிடப்பட்டிருந்த நிலையிலும் அவைக்கு நேரில் வராமல், இணை மந்திரிகள் மூலம் அவற்றை முன்னெடுக்கச் செய்வதாக மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் பொதுமக்களின் கவனத்துக்கு வராமல் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும், திருவண்ணாமலை கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு வந்த பின்னரும் அமித்ஷா நாடாளுமன்றத்திற்கு வந்து கேள்விகளை எதிர்கொள்ள தயங்குவது ஏன் எனவும் மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.