அமித்ஷா வருகை: புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் மதுக்கடைகள் மூடல்
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
08 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 08 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அமித்ஷா வருகை: புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் மதுக்கடைகள் மூடல்

அமித்ஷா வருகை: புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் மதுக்கடைகள் மூடல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார். இன்று மாலை புதுச்சேரிக்கு வரும் அவர், நாளை கோரிமேட்டில் நடைபெற உள்ள புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் காவல் கொடி (President's Colour) வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.இதையடுத்து, ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரியில் இருந்து திருவண்ணாமலைக்கு அமித்ஷா செல்கிறார்.அவரது வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.மேலும், அமித்ஷா பயணிக்கும் வழித்தடங்களில் இன்று மாலை 6 மணி முதல் நாளை பிற்பகல் 3 மணி வரை மதுக்கடைகளை மூட புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.