அமெரிக்காவில் ரெயிலில் அடிபட்டு இந்திய வம்சாவளி நண்பர்கள் 2 பேர் பலி
படம் தயாராகிறது… Generating image…
Advertisement
தினத்துளிர்
Advertisement

15 Sep 2026 www.thinathulir.com

அமெரிக்காவில் ரெயிலில் அடிபட்டு இந்திய வம்சாவளி நண்பர்கள் 2 பேர் பலி

அமெரிக்காவில் ரெயிலில் அடிபட்டு இந்திய வம்சாவளி நண்பர்கள் 2 பேர் பலி

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சப்வே ரெயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞரும், இளம் பெண்ணும் ரெயில் மோதி உயிரிழந்தனர். 24 வயதான இருவரும் போதை நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. நியூயார்க் நகரில் உள்ள சப்வே ரெயில் நிலையத்தின் தண்டவாளத்தில் ஆபத்தான முறையில் இருவரும் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த பாதையில் வேகமாக வந்த சப்வே ரெயில் அவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் நியூயார்க் நகர போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலவிகா சித்ரே மற்றும் நவம் கவுல் என தெரியவந்துள்ளது. இருவரும் நீண்டகால நண்பர்கள் என்பதும், 2024-ம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தண்டவாளத்தில் இருவரும் அமர்ந்திருப்பதை ரெயில் ஓட்டுநர் பார்த்ததும், ரெயிலை நிறுத்த முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ரெயில் அதிக வேகத்தில் வந்ததால் அதற்குள் இருவர் மீதும் மோதியதாக கூறப்படுகிறது. இருவரும் எதற்காக தண்டவாளத்தில் அமர்ந்திருந்தனர் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பு இருவரும் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்தியிருந்ததால், போதையின் காரணமாக தங்களை நோக்கி ரெயில் வருவதையும், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்தையும் அவர்கள் உணராமல் இருந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நியூயார்க் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு இளம் பட்டதாரிகள் ரெயில் விபத்தில் உயிரிழந்த சம்பவம் இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.