வெனிசுலாவுடன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணெய் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, வெனிசுலாவில் உறுதி செய்யப்பட்டுள்ள 6,500 கோடி பீப்பாய் எண்ணெய் இருப்புகளில் பெரும்பகுதி மீது அமெரிக்காவுக்கு கட்டுப்பாடு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவு மந்திரி மார்கோ ரூபியோ, பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்செத் மற்றும் வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, வெனிசுலாவில் உள்ள 17 எண்ணெய் வயல்களை மேம்படுத்தும் திட்டமும் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் வெனிசுலாவின் எண்ணெய் துறையில் சுமார் 10,000 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. இதேபோல், வெனிசுலா அரசுக்கு 20,900 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான வரி வருவாய் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அமெரிக்காவுடனான எரிசக்தி ஒப்பந்தம் 25 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என வெனிசுலா இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிகஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த ஒப்பந்தம் வெனிசுலாவுக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், நாட்டின் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 15 லட்சம் பீப்பாயாக உயர்த்துவதை இலக்காகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும், இந்த ஒப்பந்தம்வெனிசுலாபொருளாதாரத்தைமீண்டும்வலுப்படுத்துவதுடன், அரசின் வருவாயை அதிகரிக்கவும், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் உதவும் என டெல்சி ரோட்ரிகஸ் கூறினார்.