அமித்ஷா வருகை: புதுச்சேரியில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
08 Aug 2026, சனி | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 08 Aug 2026, Saturday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அமித்ஷா வருகை: புதுச்சேரியில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை

அமித்ஷா வருகை: புதுச்சேரியில் இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, புதுச்சேரி மற்றும் தமிழகத்திற்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். இன்று மாலை புதுச்சேரிக்கு வரும் அவர், நாளை கோரிமேட்டில் நடைபெறும் புதுச்சேரி காவல்துறைக்கு ஜனாதிபதியின் காவல் கொடி (President's Colour) வழங்கும் விழாவில் கலந்து கொள்கிறார்.இதனைத் தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்கு அமித்ஷா செல்கிறார்.அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு புதுச்சேரியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கு புதுச்சேரியில் டிரோன்கள் பறக்க தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.