அப்பாவுக்கு கோபம் வந்தால் அவ்வளவுதான்.. தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் பேச்சு
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
Advertisement
01 Oct 2026, வியாழன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 01 Oct 2026, Thursday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அப்பாவுக்கு கோபம் வந்தால் அவ்வளவுதான்.. தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் பேச்சு

அப்பாவுக்கு கோபம் வந்தால் அவ்வளவுதான்.. தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் பேச்சு

தமிழக முதல்-அமைச்சர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். லைகா மற்றும் ஜேஎஸ்ஜே மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். தமன் இசையமைத்துள்ளார். பரியா அப்துல்லா, ராஜூ சுந்தரம், அன்புதாசன், யோக் ஜாபி, சம்பத் ராஜ், கிரண் கொண்டா, மகாலட்சுமி சுதர்சனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேத்ரின் தெரசா சிறப்பு தோற்றத்தில் ஒரு பாடலில் இடம்பெற்றுள்ளார். இப்படம் நாளை (2-ம் தேதி) திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு ஜேசன் சஞ்சய் தீவிரமாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். விஜய்யின் மகன் இயக்குநராக அறிமுகமாகும் முதல் படம் என்பதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது தந்தை விஜய் குறித்து ஜேசன் சஞ்சய் பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன. அப்போது தனது சிறுவயது அனுபவங்களை பகிர்ந்த அவர், “அம்மாவிடம் வாரத்திற்கு ஒருமுறையாவது திட்டு வாங்குவேன். ஏதாவது பிரச்சினை செய்துவிட்டு அவரிடம் திட்டும் வாங்கியிருக்கிறேன். ஆனால் அப்பாவுக்கு மாதத்திற்கு ஒருமுறைதான் கோபம் வரும். அப்படி கோபம் வந்துவிட்டால் அவ்வளவுதான். தந்தை என்றால் அப்படித்தான் இருப்பார்கள்; அதை நாம் மதிக்க வேண்டும். எல்லோரையும் போல நானும் சிறு வயதில் பொய் சொல்வேன்” என்று தெரிவித்தார்.