அன்பில் மகேஷ் வழக்கு: தொழிலதிபர் சண்முகபிரியா வீட்டில் போலீசார் அதிரடி சோதனை
படம் தயாராகிறது… Generating image…
PRGI : TNTAM/26/A7738 தினத்துளிர் தமிழ் - மதுரை
Advertisement
தினத்துளிர்
தமிழ் தினசரி நாளிதழ் - www.thinathulir.com
28 Oct 2026, புதன் | மலர் - 01 | இதழ் - 07 | பக்கங்கள்-8 | விலை - ரூ .5/- 28 Oct 2026, Wednesday | Vol-01 - Issue-07 | Pages 8 | Rs.5/-

அன்பில் மகேஷ் வழக்கு: தொழிலதிபர் சண்முகபிரியா வீட்டில் போலீசார் அதிரடி சோதனை

அன்பில் மகேஷ் வழக்கு: தொழிலதிபர் சண்முகபிரியா வீட்டில் போலீசார் அதிரடி சோதனை

கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. அப்போது, தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவது, டி.டி.சி.பி., சி.எம்.டி.ஏ. உள்ளிட்ட அமைப்புகளின் அனுமதிகளையும் பிற சட்டப்பூர்வ ஒப்புதல்களையும் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.100 கோடிக்கும் அதிகமாகப் பணம் வசூலித்ததாகத் தனியார் பள்ளிகள் சங்கம் சார்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அன்பில் மகேஷ் பொய்யாமொழியைக் கைது செய்தனர். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு முதல் வகுப்பு சிறை வசதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஜாமீன் கோரி அன்பில் மகேஷ் சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. மேலும், அவரைக் காவலில் எடுத்து ஐந்து நாட்கள் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், அன்பில் மகேஷ் மீதான ரூ.400 கோடி லஞ்சப் புகார் தொடர்பாக, சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள ராம்ஸ் ராகஸ்ரீ வில்லாஸ் அடுக்குமாடிக் குடியிருப்பில் தொழிலதிபர் சண்முகபிரியாவின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். காலை முதலே நடைபெற்று வரும் இந்தச் சோதனையில், 10 பேர் கொண்ட போலீஸ் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.